வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012


Pen Drive வேகத்தை அதிகரிக்க

உங்கள் Pen Drive மிகவும் slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய னுயவய களை பரிமாற்றம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.
முதலில் Pen Drive கணினியில் இணையுங்கள். அதன் பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E) அதன் பின்னர் Pen Drive இல் Right Click செய்து “Properties” செல்லுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் Hardware Tab ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் Name என்பதற்கு கீழ் உங்கள் Pen Drive இனை தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்ததும் கீழ் உள்ள Properties என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து வரும் விண்டோவில் Change setting என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் Policies என்னும் Tab ஐ கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் வரும் விண்டோவில் “Better Performence” என்னும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவும் தான். இப்போது உங்கள் Pen Drive முன்னரை காட்டிலும் வேகமாக இயங்கும்.
குறிப்பு :P en Drive கணினியில் இருந்து அகற்றும்போது “Safely remove hardware ” என்பதை கொடுத்து அகற்றுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக