வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012


தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

தமிழ் எழுத்துருக்கள் எத்தனையோ பயன் படுத்தப்பட்டு வந்தன. அவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தே வந்துள்ளது. ஆனால் தற்போது மிகவும் சிறப்புடன் செயல்படும் ஒரு சிறந்த எழுத்துரு மென்பொருளாக “ஈ-கலப்பை தமிழ் யுனிகோட்” எழுத்துருவை சொல்லலாம். ஒரே நேரத்தில் தமிழிழும் ஆங்கிலத்திலும் மாறிமாறி தட்டச்சக்கூடியது. இது மிகவும் இலகுவானதும், தற்போது அதிகமானோரால் பாவிக்கப்படுவதும் ஆகும். இந்த வலைப்பதிவு கூட தமிழ் யுனிகோட் எழுத்துரு கொண்டே எழுதப்பட்டுள்ளது.
இந்த “தமிழ் யுனிகோட்” எழுத்துருவை உங்கள் கணனிகளில் பயன்படுத்துவதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மீயிணைப்பை அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
இதை எவ்வாறு உங்கள் கணனிகளில் பதிவிறக்கி பயன்படுத்துவது என்பதை அறிந்துக்கொள்ள விரும்புவோர்; கீழுள்ள தளத்திற்குச் செல்லுங்கள். மிக இலகுவான செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.thozhi.com/tamiltyping.htm
தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என பயிற்சி பெற விரும்புவோர் கீழுள்ள தளத்திற்கு செல்லலாம்.
http://ezilnila.com/tane/unicode_Writer.htm
என்றால் என்ன? அது கணனியில் எவ்வாறு இயங்குகின்றது போன்றவற்றை கற்க விரும்புவோர் கீழுள்ள தளத்தில் கற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான விளக்கத்துடன் சுரதா யாழ்வாணன் அவர்கள் காணொளி ஊடாக கற்றுத் தருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக