ஞாயிறு, 29 ஜூலை, 2012


யுத்தம் இல்லாத பூமி


 
யுத்தம் இல்லாத பூமி
மலரவேண்டும்
ஆயுதக்களஞ்சியங்கள்
பூந்தோட்டமாக மாறவேண்டும்
தீவிரவாதத்தை தீவிரவாதிகளே
தீவிரமாக வெறுக்க வேண்டும்
வாழ்க்கை எனும் பாதையில்
அன்பு எனும் வாகனத்தில்
எல்லோரும்
பயணிக்க வேண்டும்
துப்பாக்கி வெடிச்சத்தத்திற்கு பதிலாக
பட்டாசு வெடிச்சத்தமே
கேட்க வேண்டும்
போர்கள் மூலம் ஒலிக்கும்
மரண ஓசைகள்
முற்றாக நிறுத்தப்படவேண்டும்
வருங்கால மனிதர்கள்
யுத்தம் எனும் வார்த்தையை
வரலாற்றுப்புத்தகத்திலேயே
தேடிப்பார்க்க வேண்டும்
சுபீட்சமான வாழ்க்கை எல்லோரும்
வாழ வேண்டும்
சுதந்திர பூமி மலர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக