செவ்வாய், 31 ஜூலை, 2012


பென்டா ஷோ - ஆபிஸ் 2013 இலவசமாக உங்களுக்காக

நண்பர்களே மாதம் ஒரு பதிவாது எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதினால்தான் இந்த பதிவு இன்று எழுதி பதிவிட்டிருக்கிறேன்.  நம் பதிவினை மேம்படுத்த எண்ணியுள்ளேன்.  அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் பதிவின் கடைசியில் ஒரு சிறு போட்டி  ஆரம்பித்திருக்கிறேன்.  பங்கு கொள்ளுங்கள் வெற்றி பெறுங்க.  பதிவிற்கு செல்வோம்.


நம் வொண்டர்ஷேர் நிறுவனத்தின் நண்பர்கள் தொடர்ந்து அவர்களுடைய மென்பொருட்களை நம்மிடம் கொடுத்து அதன் பலன்களை எழுத சொல்கின்றனர் அவர்களுக்கு என் நன்றி என் எழுத்துக்கள் அவர்களுக்கு பிடித்திருப்பதால்தான் தொடர்ந்து அவர்க்ளுடைய் மென்பொருட்களை நம் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துகின்றனர்.

இதோ அவர்களின் அடுத்த மென்பொருள் Wondershare Fantashow

இந்த Wondershare Fantashow மென்பொருளால் நமக்கு என்ன உபயோகம்.

உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி உதாரணத்திற்கு மகனின் முதல் பிறந்தநாள் அதற்காக வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடுகிறீர்கள்.  அப்பொழுது வாடகைக்கு புகைப்படக்காரர் அமர்த்தி புகைப்படங்களையும் எடுப்பீர்கள்.  அப்படியே உங்களிடம் உள்ள டிஜிட்டல் புகைப்பட கேமிரா மூலம் நீங்களும் சில புகைப்படங்களை எடுப்பீர்கள். அந்த புகைப்படங்களை கணினியில் தரவேற்றிய பிறகு வெறும் போட்டோ கோப்புகளாக உங்கள் கணினியிலேயே  சேமித்து வைத்திருப்பீர்கள்.  அவ்வாறு சேமித்து வைத்திருக்கும் போட்டோக்களை உங்களுக்கு பிடித்த மாதிரி வடிவமைக்கதான் இந்த மென்பொருள் உதவுகிறது.


உங்கள் போட்டொக்களை ஒரு போட்டோ ஸ்லைடாக காட்டும் பொழுது அதன் பின்னே உங்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்க வைக்கலாம். அல்லது இந்த மென்பொருளில் கொடுத்துள்ள ஒலி கோப்புகளையும் உபயோகப்படுத்தலாம்.

உங்களுக்கு கவிதை எழுத தெரிந்தால் ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒரு கவிதை எழுதலாம். அல்ல்து உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதலாம்.

இதில் உள்ள பலவகையான் தீம்கள் உங்கள் போட்டோக்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் உங்கள் வேலை முடிந்த பிறகு அந்த வீடியோ கோப்பினை உங்கள் கணினியில் சேமிக்கலாம்.

செல்பேசியில் சேமித்துக் கொள்ள முடியும் அல்லது நேரடியாக யூட்யூபில் அல்லது டிவிடியிலோ சேமித்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

Microsoft Office 2013 Customer Preview Version இப்பொழுது தரவிறக்கும் வகையில் உள்ளது.  இதற்கு உங்களுக்கு Hotmail ID தேவை. 

ஹாட்மெயில் ஐடி இல்லாதவர்கள் இதோ நேரடியாக இங்கே இருந்து தரவிறக்குங்கள்.


Download Microsoft Office 2013 Full Offline installer
English:
Direct Download Link for Standalone Offline Installer (32-bit) (624 MB)
Direct Download Link for Standalone Offline Installer (64-bit)(702 MB)
 
மைக்ரோசப்ட் ஆபிஸ் 2003 நிறுவ உங்கள் கணினி குறைந்தபட்ச திறன் கீழ்கண்டபடி உள்ளதாக இருக்க வேண்டும்.
System Requirements for installing Microsoft Office 2013
  • 1GHZ or greater x86/x64 processor
  • 1GB RAM for 32bit and 2GB for 64bit
  • 3.5Gb free hard disk space.
  • Supported O.S: Windows 7, Windows 8, Windows Server 2008 R2 or newer.
  • Graphics: Directx10 graphics card /1024×576 resolution


விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.

Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஹார்டுவேர் டிரைவர் மென்பொருளை எளிதாக பேக்கப்
செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி வாங்கி 1 ஆண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பேக்கப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக்கொண்டு நம் கணினியில் எளிதாக நிறுவலாம். இந்த மென்பொருளை இயக்கி வரும் வகைகளில் நமக்கு எந்த வகையான டிரைவர் ( Audio, video,Lan, Modem) பேக்கப் செய்ய வேண்டுமோ அதை சொடுக்கி Backup Drivers என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். எல்லா வகையான டிரைவர் மென்பொருளும் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும் பல நேரங்களில் அதை தேடி எடுப்பது சிரமமான வேலை தான் இதற்காக தான் இந்த
மென்பொருள். உங்கள் கணினியுடன் வரும் Motherboard CD இல்லையென்றால் இனி இந்த இலவச மென்பொருளை தறவிரக்கி டிரைவர் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பதிப்பிற்கான தீர்வு

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 
 
 
 ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 
இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 
இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 
 
 
 டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 

தமிழ் திரைப்படங்களை கைபேசியில் பதிவிறக்க 15 தளங்கள்

நாம் வெளிவரும் புதிய படங்களை பார்பதற்கு திரை அரங்குகளுக்கு கடந்து செல்வோம் . ஆனால் நாம் வைத்திருக்கும் மொபைலிலே புதிய திரைப்படங்களை பதிவிறக்கி பார்த்து கொள்ளலாம் .

அதற்கான சில தளங்கள் :



பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்

ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம்.
ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
காலப்போக்கில், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில், பைல்களைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட பைல்களில், புதிய பைல்களை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன. சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள், விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன.
நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள இந்த புரோகிராம்களையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்கள் தேவைக்குச் சரியாக அமைந்தால், தொடர்ந்து பயன்படுத்தலாம்.
1. ஜே ஸிப் (jZip):
இந்த வகையில் நமக்குத் தென்படும் முதல் புரோகிராம் ஜே ஸிப். பைல்களைச் சுருக்கி ஆர்க்கிவ் அமைக்க, 7 ஸிப் பயன்படுத்தும் அதே தொழில் நுட்பத்தினை ஜே ஸிப் பயன்படுத்துகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட பைல்களையும் இந்த புரோகிராம் கையாள்கிறது.
பைல்களை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. நிறுவனங்களுக்கென தனியான புரோகிராமும் கிடைக்கிறது. இந்த புரோகிராம் தரப்படும் இணைய தள முகவரி :http://www.jzip.com/
2. பி-ஸிப் (PeaZip):
Zip துணைப் பெயர் மட்டுமின்றி, மற்ற துணைப் பெயர்களுடனும் சுருக்கப்பட்ட பைல்களைத் தரும் புரோகிராம்கள் உள்ளன. பி-ஸிப் புரோகிராம் இவற்றை எளிதாகக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7z, Arc, Bz2, Gz, Paq, Pea, Quad/Balz, Tar மற்றும் Upx ஆகிய பார்மட்களில் சுருக்கிய பைல்களைத் தருகிறது.
இவை மட்டுமின்றி, Ace, Arj, Cab, Dmg, Iso, Lha, Rar மற்றும் Udf ஆகிய துணைப் பெயருடன் சுருக்கப்பட்ட பைல்களையும் விரித்து பைல்களாகத் தருகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. புரோகிராமினை இலவசமாகப் பெறhttp://www.peazip.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.
3. குயிக் ஸிப் (Quick Zip):
சுருக்கப்பட்ட பைல்களிலிருந்து பைல்களைப் பெற்றுப் பயன்படுத்துவதில், குயிக் ஸிப் புரோகிராம் எளிதாகச் செயல்படுகிறது. இதற்கெனத் தரப்படும் இன்டர்பேஸ் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போல்டர்கள், விண்டோக்கள் மற்றும் சுருக்கி வைக்கப்பட்ட பைல்களிடையே செல்வது மிக எளிதாகிறது.
Zip மற்றும் 7z உள்ளிட்ட பல வகை பார்மட்களை இது கையாள்கிறது. சுருக்கிய பைல்களில், புதிய பைல்களைச் சுருக்கி அமைத்து இணைக்க, அவற்றை இழுத்துச் சென்று விடும் வசதியை அளிக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.quickzip.org/
4. ஸிப் ஜீனியஸ் (ZipGenius):
புதிய வகை பார்மட்களில் சுருக்கித் தருவதும், அதிகமான எண்ணிக்கையில் மற்ற பார்மட்களைக் கையாளும் திறன் பெற்றிருப்பதும் இந்த புரோகிராமின் சிறப்பாகும். இதன் இன்டர்பேஸ் விண்டோஸ் எக்ஸ்புளோர ருடன் இணைந்து செயல்படும் கட்டமைப்பி னையும் கொண்டுள்ளது. இதனால், இந்த புரோகிராமின் செயல்பாட்டினை எந்த ஒரு எக்ஸ்புளோரரின் விண்டோவிலும் பெற முடியும்.
இருபதுக்கும் மேற்பட்ட பைல் சுருக்கும் பார்மட்டினை சப்போர்ட் செய்வதுடன், இந்த புரோகிராம், நான்கு வகையான தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் நாம் ஒருவருக்கொருவர் பைல் களைப் பரிமாறிக் கொள்வதில் அதிக பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன. ஸிப் ஜீனியஸ் புரோகிராம் பெற http://www.zipgenius.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
5. 7–ஸிப் (7-Zip):
இது ஓப்பன் சோர்ஸ் திட்டத்தில் உருவான புரோகிராம். இதனுடைய 7z பார்மட்டில், மிக வலுவான பைல் சுருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பைல்களைச் சுருக்கும் போதே, மற்றவர் கள் அதனை அணுகித் திறக்க முடியாத வகையில், பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சுருக்க வழி தரப்படுகிறது. எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில், இதன் இன்டர்பேஸ் விண்டோ அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பார்மட் தவிர 7z, Xz, BZip2, GZip, Tar மற்றும் Zip ஆகிய பார்மட்களையும் கையாளும் திறனை இந்த புரோகிராம் தருகிறது. 32 பிட் மற்றும் 64 பிட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயக்கும் வகையில் இந்த புரோகிராம் www.7-zip.org/என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.
6. இஸ் ஆர்க் (IZArc):
மேலே தரப்பட்ட பல்வேறு புரோகிராம்களின் செயல்பாடு போலவே, இந்த புரோகிராமும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. 7–Zip, Ace, Arc மற்றும் பல பார்மட்களைக் கையாள்கிறது. இதன் இன்டர்பேஸ் வழியாக, இந்த பைல் பார்மட்களை வெகு எளிதாகக் கையாளலாம். விண்டோஸ் எக்ஸ்புளோர ரில் இருந்து, இந்த புரோகிராமின் விண்டோவிற்கு பைல்களை இழுத்து வந்து சுருக்கும் வசதி உள்ளது.
சிடிக்களில் பைல்கள் இருப்பின், Iso, Bin, Cdi மற்றும் Nrg ஆகிய இமேஜ் பார்மட் பைல்களை அணுகிச் சுருக்கும் வசதியும் உள்ளது. இந்த அனைத்து வசதிகளுக்கும் மேலாக, இதில் பயன்படுத்தப்படும் 256-bit AES என்ற தொழில் நுட்பம், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, சுருக்கப்பட்ட பைல்களை அணுகி தகவல்களைப் பெற முடியும் என்ற கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://www.izarc.org/
7. ஹேம்ஸ்டர் (Hamster):
பைல் சுருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் எக்ஸ்புளோரரு டன் இணைந்து பணியாற்றும் வசதியைத் தருகின்றன. ஹேம்ஸ்டர் புரோகிராம் தனக்கென தனியான ஒரு விண்டோ வினை அமைத்துக் கொண்டு செயல் படுகிறது. நம் விருப்பப்படியும் விண்டோவினை பல வண்ணங்களில் அமைக்கலாம்.
எந்த புதிய பார்மட்டிலும் நம் விருப்பப்படி பைல்களைச் சுருக்கி அமைக்கலாம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் ப்ராசசர்களின் செயல் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹேம்ஸ்டர் செயல்படுவது, இரு மடங்கு வேகத்தில் விரைவாக வேலையை முடிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சி தரும் இந்த புரோகிராம் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.hamstersoft.com/
இதுவரை விண்ஸிப், விண்டோஸ் ஸிப் புரோகிராம் வசதிகளை மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்திருப்போம். இப்போது மேலே பல இலவச புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன.
 



பயர்பொக்ஸ் பதிப்பு 13ல் Reset பட்டன்


முதன் முதலாக கணணியில் பயர்பொக்சை நிறுவிய பின்னர் வேகமாக செயல்படத் தொடங்கும், ஆனால் சில நாட்களில் அதன் வேகம் குறையத் தொடங்கும்.இதற்கு காரணம் உங்களுக்குப் பிடித்தது என எவற்றையேனும் சேர்த்திருப்பீர்கள். சில எக்ஸ்டன்ஷனை அப்போதைய தேவைக்கு ஏற்றவாறு நிறுவிச் செய்த பின்னர், அப்படியே மறந்திருப்பீர்கள்.
இவை எல்லாம், உங்கள் மெமரியில் இடம் பிடித்துக் கொண்டு பயர்பொக்ஸ் இயக்கத்தின் வேகத்தை குறைக்கும்.
ஆனால் எது வேகத்திற்கு இடையூறாக உள்ளது என உங்களால் கண்டறிந்து நீக்க இயலவில்லை. அதற்கான நேரமும் உங்களிடம் இல்லை.
என்ன தீர்வு? கணணியை ரீ செட் செய்வது போல பயர்பொக்ஸ் உலாவியையும், முதலில் நிறுவச் செய்த போது இருந்தது போல அமைத்தால், ஒரு ரீசெட் பட்டன் இதற்கென இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா!
மொஸில்லா அதைத்தான் தன் பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் செய்துள்ளது. புதிய ரீசெட் பட்டன் ஒன்றைத் தந்துள்ளது. இதனை about:support என்ற பிரிவில் கிளிக் செய்து பெறலாம்.
Help —> Troubleshooting Information என்று செல்ல வேண்டியதிருக்கும். இங்கு அமைந்துள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், மாறா நிலையில் உள்ள செட்டிங்ஸ் உடன் புதிய தோற்றம் மற்றும் இயக்கம் கிடைக்கும்.
இதில் உங்கள் உலாவியின் வரலாறு, கடவுச்சொல், குக்கீஸ், புக்மார்க் என அனைத்தும் கொப்பி செய்யப்பட்டு கிடைக்கும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பயர்பொக்ஸ் மூன்று முறை கிராஷ் ஆனால், இந்த பட்டனைக் காட்டி ரீசெட் செய்திடவா என்று ஒரு ஆப்ஷனைக் காட்டப்படும். இதனை கிளிக் செய்தால் மீண்டும் பழைய நிலைக்கு பயர்பொக்ஸ் வந்துவிடும்.
இதில் ஒரு சின்ன பிரச்னை என்னவென்றால் இந்த பட்டன் எங்கு உள்ளது என்று தேடி அலைய வேண்டியதுள்ளது.

புத்தம் புதிய Mac Blu-ray Player மென்பொருளை​த் தரவிறக்கம் செய்ய


கணணியில் பயன்படுத்தப்படும் பல்லூடகக் கோப்புக்களை(Multimedia) இயக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் காலத்திற்குக் காலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட மென்பொருட்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதற்கிணங்க தற்போது Mac Blu-ray Player எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது அப்பிளின் மக் இயங்குதளத்திலும், விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் மிகச்சிறந்த பயனர் இடைமுகத்தைக் கொண்ட இந்த மென்பொருளானது அதி உயர் துல்லியமான காட்சிகளை உருவாக்கவல்லது.
அத்துடன் movie, video, audio, music, photo போன்றனவற்றில் அடங்கும் அனைத்து வகையான கோப்புக்களையும் இயக்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 30 ஜூலை, 2012


Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால்பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர்.
அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது.
இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யhttp://sourceforge.net/projects/gimp-win/
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -http://sourceforge.net/projects/gimp-win/files/GIMP%20Help%202/GIMP%20Help%202.6.0%20%28updated%20installer%29/gimp-help-2-2.6.0-en-setup.exe/download

சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றுவதற்கு

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு எளிதாக மாற்றலாம்.ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றிலாம்.
இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.
எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத்தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை மாற்றுவதற்கு

கைபேசியில் கமெரா வசதி இருப்பவர்கள் எளிதாக வீடியோ எடுக்கலாம். ஒரு சில நேரங்களில் கமெராவின் கோணங்களை மாற்றி அமைத்து வீடியோக்களை எடுத்து விடுவர்.இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை கணணியில் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும்.
ஆனால் இதனை எளிதாக VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு மட்டும் Rotate செய்து பார்க்கலாம். இதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு X2X Free Video Flip and Rotate மற்றும் Free Video Flip and Rotate (DvdVideoSoft) என்ற மென்பொருள்கள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருள்கள் வீடியோக்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக மற்றும் கீழ்க்கண்ட வகைகளிலும் சுழற்றச் செய்து மாற்றம் செய்து தருகின்றன.
- rotate video 90 CW.
- rotate video 180.
- rotate video 90 CCW.
- flip video horizontal.
- flip video vertical.
- flip video vertical and rotate 90 CW.
- flip video vertical and rotate 90 CCW.
X2X Free Video Flip and Rotate: இந்த மென்பொருளின் மூலம் வீடியோக்களை உங்களது தேவையான அளவிற்கு வெட்டிக் கொள்ள முடியும்.
AVI, MPG, MPEG, MP4, WMV, ASF, MOV, QT, 3GP, 3G2, AMV, FLV போன்ற அனைத்து வகை வீடியோக்களையும் இந்த மென்பொருள் ஆதரிக்கிறது. மாற்றப்பட்ட வீடியோவை MP4 வகையில் கொடுக்கும்.
Free Video Flip and Rotate(DvdVideoSoft): இந்த மென்பொருளின் மூலம் வேகமாக வீடியோ சுழற்றச் செய்யலாம். மேலும் இது நாம் கொடுக்கும் வீடியோவை அதே போர்மட்டில் தருகிறது.

Adobe photoshop cs6 beta பதிப்பினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும்

மிகசிறந்த புகைப்பட வடிவமைப்பு மென்பொருளான adobe photo shop மென்பொருளின் புதிய CS6 பீட்டா பதிப்பினை தற்போது இலவச தரவிறக்கத்திற்கு adobe தளத்தில் வெளியிடபட்டுள்ளது.
மிக பெறுமதி வாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்க .
விண்டோஸ் மற்றும் mac இயங்குதளங்களுக்கான பதிப்பினை பெறலாம்.

ஆன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்கள் வடிவமைக்கலாம்

உங்கள் கணினியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.
இந்த தளத்திற்கு செல்க EPASSPORTPHOTO.COM
கீழே உள்ளது போன்று தோன்றும் அதிலே நாட்டினையும் புகைப்படத்தினையும் தெரிவு செய்க பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்க
பின்னர் தோன்றும் விண்டோவில் உங்கள் கணினியில் இருந்து புகைப்படத்தை UPLOAD செய்து NEXT என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போன்று தோன்றும்.
நீங்கள் தெரிவு செய்த படத்தின் அருகில் உங்கள் மௌஸ் புள்ளியை கொண்டு செல்லும் போது + குறியீடு தோன்றும் இப்போது உங்கள் மௌஸ் முனையை நகர்த்தி படத்தின் தேவையான பகுதியை தெரிவு செய்க. பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்கள் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு விடும். கட்டணம் செலுத்தி பிரிண்ட் செய்யும் வசதி கொண்ட விண்டோஸ் தோன்றும் அதிலே NO THANKS என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு ஏற்ப தெரிவு செய்க . DOWNLOAD THE PASSPORT PHOTO SHEET IMAGE என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணினியில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யலாம்.

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் TYPE செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.
ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை ஃ படத்தை எளிதாக TYPE செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும் ( image to text converter என்றும் கூறுவர்).
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள் , PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.


SolveigMM AVI Trimmer + MKV – படங்களை துல்லியமாக எடிட்டிங் செய்யும் மென்பொருள்

சால்வெஜ்எம்எம் ட்ரிம்மர் வேகமாக மற்றும் இழப்பில்லாத AVI மற்றும் MKV இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள் ஆகும். இந்த இலவச எவிஐ திருத்தி புத்திசாலித்தனமாக பயன்படுத்த எளிதாக உள்ளது மற்றும் எந்த என்கோடிங்/ டிகோடிங் செயல்முறைகளில் ஒருங்கிணைப்பு பிரச்சினை இல்லை.
வீடியோ / ஆடியோ தரக்குறைவினை திருத்தி பின்னர் எழுகின்றன. அனைத்து வீடியோ / ஆடியோ உள்ளடக்கம் கொண்ட AVI மற்றும் MKV கோப்பு வகைகளுக்கு துணைபுரிகின்றன

சிறப்பம்சங்கள்:
•சால்வெஜ் எம்எம் வீடியோ எடிட்டிங் எஞ்சின் அடிப்படையிலானது
•எந்த வீடியோ உள்ளடக்கத்தையும் ஆதரிக்கிறது – டிவி, XviD, DivX, 3ivX, MPEG-4, முதலியன
•எந்த ஆடியோ உள்ளடக்கத்துக்கும் துணைபுரிகிறது – AC3, MPEG-1, 2 லேயர் I, II, III
•எவிஐ கோப்புகளை ஒருங்கிணைத்து இழப்பு இல்லாமல் திருத்த அனுமதிக்கிறது
•2 மற்றும் 4 ஜிபி அளவு உள்ள எவிஐ கோப்புகளை ஆதரிக்கிறது
•Matrosska கோப்புகளை ஆதரிக்கிறது
•OpenDML எவிஐ கோப்பு வடிவம் நீட்டிப்புக்கு துணைபுரிகிறது
•கே பிரேம் / GOP துல்லியம்
•ஒரு நேரத்தில் ஒரு படத்தில் பல பகுதிகளை விட்டு எடிட்டிங் அனுமதிக்கப்படுகிறது.
•பல மொழிகளில் ஆங்கிலம், ஜெர்மன், ஃபின்னிஷ், பிரஞ்சு, இத்தாலியன், ரஷியன் மற்றும் ஸ்பானிஷ் மற்றும் இன்னும் பிற, டானிஷ், சீன மொழிகளுக்கு இடைமுகம் அளிக்கிறது

Pixel Degrees 1.0: புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருள்

ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
தேவைக்கு ஏற்றாற் போல படங்களை எடிட்டிங் செய்ய வேண்டி ஏற்படலாம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு Pixel Degrees 1.0 மென்பொருள் பெரிதும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருள் மூலம் விரைவாகவும், சிறந்த முறையிலும் படங்களை எட்டிட்டிங் செய்து கொள்ள முடியும்.


பல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியமைப்​பதற்கு

இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை  நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல்  என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.இப்புகைப்படத்துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள்  காணப்படுகின்றன.
எனினும் அனேகமானவற்றில் ஒவ்வொரு படங்களினதும் அளவை  தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது.
இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இணைத்து  அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும்  புதிய மென்பொருள் உதவி புரிகின்றது. இதன் கோப்பானது 9.5 MB என்ற சிறிய அளவு உடையதாக காணப்படுவதுடன் இலகுவாக 3 படி முறைகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்.


உடல் எடை எளிதில் குறைய
[ வெள்ளிக்கிழமை, 27 யூலை 2012, 03:38.28 மு.ப GMT ]
ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம்.
1. எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது.
ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலும் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்து விடுகின்றது.
2. ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
3. பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும்.
4. ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும்.
5. எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும்.
6. ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும்.
7. எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.
ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்.


மென்பொருள் செய்தி
Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:11.22 மு.ப GMT ]
ஒவ்வொருவரின் கணணியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருள்களில் ஒன்று தான் Advanced SystemCare v6.1.
இந்த மென்பொருள் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளது.
தற்போது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர்.
இந்த புதிய பதிப்பில் முக்கிய மாற்றமாக மென்பொருளின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் கொடுத்துள்ளனர்.
மேலும் மென்பொருளில் தொழில் நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பை விட தற்பொழுது சிறந்து விளங்கும்.
இருப்பினும் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில்(சோதனை பதிப்பு) வெளியிட்டு உள்ளனர். ஆகவே இந்த மென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

ஞாயிறு, 29 ஜூலை, 2012



கணணி செய்தி
மின்னஞ்சல் மூலம் பெரிய அளவுடைய கோப்புக்களை பரிமாற்றம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 01:58.10 மு.ப GMT ]
பெரிய அளவுடைய கோப்புக்களை தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்வதற்கு மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் தரப்படும் இடவசதி போதிய அளவு இல்லாமையினால் இவ்வாறான கோப்புக்களை பரிமாற்றம் செய்வது கடினமாகும்.
எனினும் இதனை நிவர்த்தி செய்து கோப்புக்களை பரிமாறுவதற்கு Zeta Uploader எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிய பின், அதனை இயக்கி Files to upload எனும் பகுதியில் காணப்படும் Add files/Add folder எனும் அம்சத்தின் ஊடாக பரிமாற்றம் செய்ய வேண்டிய கோப்புக்களை இணைக்க வேண்டும்.
பின்னர் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களது மின்னஞ்சல் முகவரியை உட்செலுத்தி, செய்தி ஒன்றினையும் டைப் செய்த பின்னர் Update now என்பதனை கிளிக் செய்யவும். இதன் பின்னர் குறிப்பிட் கோப்பு தரவேற்றப்பட்டு அனுப்பப்படும்.
அனுப்பிய பின் மின்னஞ்சலுக்கு செய்திகளுடன் ஒரு இணைப்பு அனுப்பப்படும், அதனை கிளிக் செய்து குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

யுத்தம் இல்லாத பூமி


 
யுத்தம் இல்லாத பூமி
மலரவேண்டும்
ஆயுதக்களஞ்சியங்கள்
பூந்தோட்டமாக மாறவேண்டும்
தீவிரவாதத்தை தீவிரவாதிகளே
தீவிரமாக வெறுக்க வேண்டும்
வாழ்க்கை எனும் பாதையில்
அன்பு எனும் வாகனத்தில்
எல்லோரும்
பயணிக்க வேண்டும்
துப்பாக்கி வெடிச்சத்தத்திற்கு பதிலாக
பட்டாசு வெடிச்சத்தமே
கேட்க வேண்டும்
போர்கள் மூலம் ஒலிக்கும்
மரண ஓசைகள்
முற்றாக நிறுத்தப்படவேண்டும்
வருங்கால மனிதர்கள்
யுத்தம் எனும் வார்த்தையை
வரலாற்றுப்புத்தகத்திலேயே
தேடிப்பார்க்க வேண்டும்
சுபீட்சமான வாழ்க்கை எல்லோரும்
வாழ வேண்டும்
சுதந்திர பூமி மலர வேண்டும்.