புதன், 25 டிசம்பர், 2013

வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற

வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற

சில வருடங்களுக்கு முன்னர் 3 டி எபெக்டில் மைடியர் குட்டி சாத்தான் என்று ஒரு படம் வந்து அட்டகாசமாக ஒடியது. அதுபோல நம்மிடம் உள்ள வீடியோ படங்களை 3 டி படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொணடஇதனை பதிவிறக்கம்  செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் 2டி யிலிருந்து 3டி.3டியிலிருந்து 3 டி.3டியிலிருந்து 2டி என மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்குதேவையானதை தேர்வு செய்யவும். நான் 2டியிலிருந்து 3டியாக மாற்றும் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளேன்.இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நான்குவிதமான மாடல்கள்கொடுத்துள்ளார்கள்.மேலும் 3டியின் அளவினையும் அதிகரி்த்துக்கொள்ள  இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி கொள்ள்லாம்.


இதில் உள்ள அவுட்புட் செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வ செய்துகொள்ளலாம்.

 ஒ.கே.கொடுத்தபின்னர் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.நமது வீடியோ கன்வர்ட்் ஆவதை காணலாம்.
 நமது வீடியோ கன்வர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோவானது 3டி வீடியோ படமாக மாறிஉள்ளதை காணலாம்.

டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க

டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க

திருச்சியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பருடய நண்பர் திருமணத்திற்கு எடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்டினை தவறுதலாக டெலிட் செய்துவிட்டோர். அதில் வைத்திருந்த அனைதது போட்டோகளும் டெலிட் ஆகிவிட்டது.போட்டோக்களை மீண்டும் கொண்டுவர ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என கேட்டடார். இணையத்தில் தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 10 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Recover Photo.Audio & Video கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள்  கணிணியில் உள்ள டிரைவிலிருந்தோ - எக்ஸ்டர்னல் மெமரி கார்டிலிருந்தோ போட்டோக்களை ரெக்கவரி செய்யலாம். இதில் நமக்கான டிரைவ் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் குறிப்பி்ட்ட டிரைவிலிருந்து போட்டோ,வீடியோ.ஆடியோ ஆகியவனை ரெக்கவரி ஆகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்கள் வீடியோக்கள் ப்ரிவியூபார்க்கும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் கீழே உள்ள ரெக்கவரி கிளிக செய்திட உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் ஆடியோக்கள் ரேக்கவரி ஆகும். கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.
இறுதியாக இதில் ப்ரிவியூவினையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அனைத்து பைல்களும் ரெக்கவரி ஆனதும் இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்து அதற்கான இடத்தினை குறிப்பிட்ட உடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு ஆடியோ,வீடியோ.புகைப்படங்கள் தனிதனி போல்டராக உள்ளதை காணலாம். தேவையானதை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

வாழ்த்துஅட்டையை நாமே தயாரிக்க

வாழ்த்துஅட்டையை நாமே தயாரிக்க

புதுவருடம்.பிறந்தநாள்,திருமண நாள் என அனைத்து விஷேஷங்களுக்கும் நாம் வாழ்த்து அட்டையை வாங்கி அனுப்புவோம். அந்த வாழ்த்து அட்டையை நாமே தயாரித்தால் எவ்வாறு இருக்கும. நமக்கு விரும்பிய புகைப்படங்களையும் -நமது புகைப்படங்களையும் இணைக்கலாம்,-விரும்பிய வாசகங்களை சொந்தமாக எழுதி தயாரிக்கலாம். 24 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கார்டின் அளவினை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எந்த மாடலில் உங்களுக்கு கார்ட் வேண்டுமோ அதனை தேர்வு செய்திட இதில் வலதுபுறம் உள்ள மாடலில் ஒன்றை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டொவில் பாருங்க்ள.

நாம் எந்த விஷேஷத்திற்காக வேண்டுமோ அதற்கான கார்டினையும் டிசைனையும் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும்.
 
இதில் முதற்பக்கம் இரண்டாவது பக்கம்.மூன்றாவது பக்கம் கடைசி பக்கம் என நாம் ஒவ்வொரு பக்கத்திற்கும் வேண்டிய புகைப்படத்தினையும் வார்த்தைகளையும் தேர்வு செய்யலாம்.
 விதவிதமான கார்ட்டுன்களும் ்வாசகங்களையும் இணைத்துள்ளார்கள்.
 நமது விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்லைடரை அட்ஜஸ்ட் செய்து கார்டினை அழகுப்படுத்தலாம்.

மறைத்து வைத்துள்ள பைல்கள்-போல்டர்களை திறந்து பார்க்க

மறைத்து வைத்துள்ள பைல்கள்-போல்டர்களை திறந்து பார்க்க

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறுஅடி பாயும் என பழமொழி உள்ளது முன்பு பைல் போல்டர் களை மறைத்துவைப்பது எப்படி என்று பார்த்தோம்.அதுபோல் பைல் மற்றும போல்டர்களை மறைத்துவைத்தால் இந்த சாப்ட்வேர் மூலம் எப்படி எளிதில் கண்டுபிடித்து என பார்க்கலாம்.. 150 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் மறைந்துள்ள பைல்களையா போல்டர்களையா என முடிவு செய்து அதற்கான விண்டோவினை கிளிக் செய்யவும.
 உங்களுக்கான டிரைவினை தேர்வு செய்து ஒ.கே.தரவும். சில வினாடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பைல்களும் போல்டர்களும் தெரியும் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து இதில் உள்ள அன்ஹைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 ஒ.கே. கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் தேர்வு செய்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைல்  திறந்த நிலையில் கிடைக்கும். பயன்படுத்திப்பர்ருங்கள் கருத்துக்களை கூறுங்கள். 

வீடியோ பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற

வீடியோ பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற

இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்களிடம் உள்ளவீடியோ பைல்களை தேர்வு செய்யவும்பின்னர் அதனை எந்தஆடியோ பார்மெட்டில் மாற்ற விரும்புகின்றீர்களோ அந்தஆடியோ பார்மெட்டினை தேர்வு செய்யவும் உங்களுக்கு இதில்Advanced Audio Coding.Dolby Digital AC-3,Sun AU Format(.*au),MPEG-4Audio(.*m4a),MPEG Layer-2 Audio(.*mp2),Mpeg Layer-3 Audio(.*mp3),Ogg Vorbis Audio (.*ogg), Real Audio (.*ra), Waveform Audio (.*wav),Windows Media Audio (.*wma) ஆகிய பார்மெட்டுக்களில்நமக்கு எந்த பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வுசெய்யவும்.இதில் வலது புறம் கீழே  நாம் தேர்வு செய்தவீடியோவின் ப்ரிவியுவினை காணலாம்கீழே உள்ளவிண்டோவில் பாருங்கள்.

அதனைப்போலவே நாம் தேர்வு செய்த வீடியோபைல்களின்முழுவிவரம் தெரிய வரும்கீழே உள்ள விண்டோவில்பாருங்கள்.


இதன் மொத்த விண்டோவினையும் நாம் பார்க்கும் சமயம்நமக்கு முழுவிவரமும் தெரியவரும் இதில் நாம் பைல்களைசேமிக்கும் இடத்தினையும்,பைல் பார்மேட்டினையும்பிரிவியுவினையும் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம்.இறுதியாக இதில் உள்ள கன்வரட்ட் கிளிக் செய்திட நமக்குநமக்கான வீடியோ பைல்ஆனது ஆடியோ பைல்களாகமாறியிருப்பதனை காணலாம்..மேலும இதில் சிறப்பமசங்களாககீழ்கண்ட விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.
வீடியோ பைல்களையும் ஒரு பார்டெட்டிலிருந்து வேறு ஒரு வீடியோ பார்மெட்டுக்குமாற்றலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


மறந்து போன MEMORY CARD PASSWORD இனை கண்டுபிடிப்பது எப்படி?

மறந்து போன MEMORY CARD PASSWORD இனை கண்டுபிடிப்பது எப்படி?


இதை கண்டுபிடிக்க , எந்த Nokia Phone இற்குல் வைத்து நீங்கள் Password கொடுத்தீர்களோ... அந்த Phone இற்குல் உங்களுடைய Memory இனை போட்டால் Password கேட்க கூடாது.அடுத்தவர் Phone இற்குல் போட்டால் மட்டுமே Password கேட்க வேண்டும்.இப்படி  இருந்தால் மட்டுமே இந்த முறை வேலை செய்யும்.

இதை செய்வதற்கு , Mobile Guard என்ற Application ஐ உங்கள் Phone இல் Download செய்து Install செய்து கொள்ளுங்கள் (உங்களிடம் X-plore என்ற Application  இருந்தால் அதிலும் இதை செய்ய முடியும்)

பின் அதை Open செய்து ,  File Mgr இற்கு சென்று , Phone Memory (C) இற்குல் ,  SYS என்ற Folder இற்குல் செல்லவும்.



பின் Data என்ற Folder இற்குல் சென்று,  mmcstore என்ற File இனை Copy செய்து வேறு ஒரு இடத்தில் Paste செய்யுங்கள்.





அதற்கு பிறகு,  அதனுடைய பெயரை mmcstore.txt என மாற்றி, Open பன்னி பாருங்கள்,Memory Card இன்  Password இருக்கும்.





என்னுடைய Memory Card இன் Password , 12345 ஆகும்...

சிலருக்கு இதை செய்யும் போது, ஒரு  பிரச்சினை வரும் அதாவது அந்த File இனை Copy பண்ன இயலாமல் இருக்கும்,



அதற்கு ROMPatcher+ என்ற Apps இனை உங்கள் Phone இல் install செய்துவிட்டு Open4All RP+ என்பதை Open பன்னிவிட்டு, மேல் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

NOKIA PHONE இல் தமிழ் FONT இனை INSTALL செய்வது எப்படி?

NOKIA PHONE இல் தமிழ் FONT இனை INSTALL செய்வது எப்படி?


இதை எப்படி செய்வது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் இது 100 % Android இல் தமிழ் வேலை செய்வது   போல் ,  வேலை செய்யும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.காரணம் இந்த Tamil Unicode  Font சரியாக அதை காட்டுகிறது இல்லை! அதாவது ஒரு எழுத்தோடு இன்னும் ஒரு எழுத்தை நெருக்கி காட்டுகிறது, அது தான் இதில் உள்ள பிரச்சினை..இதை சரி செய்ய, உங்களிடம் வேறு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் அல்லது உங்களிடம் வேறு Tamil Unicode Font இருந்தால் கீழ் உள்ள முறையை பயன்படுத்தி செய்து பாருங்கள்.என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இது Nokia S60v3 மற்றும் S60v5 ஆகியவற்றில் மட்டுமே வேலை செய்யும். இதை செய்வதற்கு,இங்கு சென்று இந்த Font இனை Download செய்து கொள்ளுங்கள்.

பின் உங்களுடைய Phone இன் Memory Card இனை Computer இல்  இனைத்து, Resource என்ற Folder இற்குல் செல்லுங்கள்.

அங்கு , Fonts என்ற ஒரு Folder ஐ உருவாக்குங்கள். அதற்குல், நீங்கள் Download செய்த Font ஐ Copy செய்து Paste கொள்ளுங்கள்.


பின் அதற்குல் இருக்கும் Font இனை Copy செய்து , அதே இடத்தில் 3 முறை Paste செய்யுங்கள்.


அதற்குல் இருக்கும் 4 Font இற்கும், கீழ் உள்ளபடி Rename இனை கொடுங்கள்.

s60snr.ttf
s60ssb.ttf
s60tsb.ttf
S60ZDIGI.ttf



இப்போது...அந்த Memory Card ஐ உங்களுடைய Phone இற்குல் போட்டுவிட்டு, Phone ஐ Restart பண்னுங்கள்..உங்களுடைய Phone இல் , தமிழ் மேலே சொன்னதை போல் தோன்ற ஆரம்பிக்கும்...

டிரைவ் மறைத்திட

டிரைவ் மறைத்திட

நம்மிடம் உள்ள டிரைவ்களை முழுவதுமாக மறைத்துவைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நம்மிடம் உள்ள டிரைவ்களின் எழுத்துக்களில் எந்த டிரைவினை மறைக்க விரும்புகின்றமோ அந்த டிரைவ் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடவும்.கீழே உள்ள் விண்டோவில பாருங்கள்.
நான் A  டிரைவ் வினை தேர்வு செய்துள்ளேன் மேலும் நாம் மறைக்க விரும்பும் டிரைவ்விற்கு பாஸ்வேர்டும் கொடுத்து பாதுகாக்கலாம். இதனால் நமது டிரைவ்வானது கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும். இப்போது இதில் நான் டிரைவினை தேர்வு செய்தபின் விண்டோவினை மூடிவிட்டேன் இப்போது மை கம்யூட்டரை திறந்து பார்க்கையில் எனக்கு கீழ்கணட விண்டோ தெரிந்தது. இதில் நான் தேர்வு செய்த டிரைவானது முழுவதுமாக மறைந்துவிட்டதை காணுங்கள்.
இப்போது மீண்டும் நான் இந்த சாப்ட்வேரினை திறந்து இதில் நான் தேர்வு செய்த டிரைவின் ரேடியோ பட்டனை நீக்கிவிட்டேன். இப்போது மீண்டும் நான் மைகம்யூட்டரினை திறந்து பார்க்க எனக்கு கீழ்கண்ட விண்டோ தெரிந்தது.
ரகசிய தகவல்கள் முக்கியமான புகைப்படங்கள் மற்றவர்கள் பார்வையில் இருந்து பாதுகாக்க இந்த சாப்ட்வேரினை பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

altநாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

COMPUTER இல் உள்ள இணைய இணைப்பை WI-FI மூலம் SHARE பண்னுவது எப்படி?

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

altகம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு

கணனியின் நினைவகமாக RAM-யை சிறந்த நிலையில் பாதுகாக்க உதவும் மென்பொருள்

கணனியின் நினைவகமாக RAM-யை சிறந்த நிலையில் பாதுகாக்க உதவும் மென்பொருள்

கணனியின் செயற்பாட்டில் பிரதான நினைவகமானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தொடர்ச்சியாக பல நாட்கள் இயங்கும்போது அதன் செயற்பாட்டில் மந்த நிலை ஏற்படுகின்றது.
இதனை சரிசெய்வதற்கு Max RAM Optimizer எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருள் மூலம் சீரான கால இடைவெளியில் பிரதான நினைவகத்தினை சரிபார்க்கக்கூடியதாக இருக்கின்றது.