புதன், 22 அக்டோபர், 2014

அநாவசியமான கோப்புக்களை நீக்க இலவச மென்பொருள்

கணனியின் வேகத்தை மந்தமாக்குவதுடன், சேமிப்பு நினைவகத்தின் அளவினை குறைக்கக்கூடியதுமான தேவையற்ற கோப்புக்களை நீக்குவதற்கு AnyCleaenr எனும் புதிய மென்பொருள் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
இவற்றினை விட தற்காலிக கோப்புக்கள் மற்றும் Internet Explorer, Chrome, Firefox, Opera ஆகிய உலாவிகளில் சேமிக்கப்படும் Cache கோப்புக்கள் என்பனவற்றினையும் நீக்கி கணனியை வினைத்திறனுடன் செயற்பட வைப்பதற்கு உதவுகின்றது.
PDF கோப்பிலுள்ள படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு

PDF கோப்பு ஒன்றில் காணப்படும் அநாவசியமான படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு PDF Eraser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த இலவச மென்பொருளினைக் கொண்டு இரண்டே இரண்டு படிமுறைகளில் Text, Images, Logos மற்றும் தேவையற்ற பகுதிகளை Delete அல்லது Erase செய்ய முடியும்.
இவை தவிர எழுத்துக்கள், படங்களை உட்புகுத்தவும் முடிவதுடன், தவறான திசைகளில் காணப்படும் PDF பக்கங்களை திருப்பிக்கொள்ள (Rotate) முடியும்.
மல்வேர் மற்றும் தேவையற்றவையை நீக்க உதவும் மென்பொருள்

இன்று இணையத்தளங்களில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் கணனிக்கு பாதுகாப்பு அற்ற மென்பொருட்கள் உட்பட மல்வேர்களே அதிகம்
காணப்படுகின்றன.
அறியாமல் கணனியில் நிறுவப்பட்ட இவ்வாறான மென்பொருட்களை இனம்கண்டு நீக்குவதற்கு Should I Remove It? எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது கணனியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதுடன், இணையத்தளங்கிலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் தேவையற்ற மென்பொருட்களை நீக்குதல், ஹேக்கர்களின் அனுமதியற்ற உள்நுழைவு என்பன தொடர்பாகவும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
வீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்

வீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்றும் கோப்புக்களை பரிமாறிக்கொள்ளும் வசதியை ஸ்கைப் தருகின்றது.
தற்போது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
Skype Qik என்று அழைக்கப்படும் இப்புதிய வசதியின் மூலம் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு சிறிய வீடியோ மெசேஜ்ஜினை அனுப்ப முடியும்.
மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய Skype Qik வசதியானது அன்ரோயிட், iOS, Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

iPad மற்றும் iPhone தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்

iPad மற்றும் iPhone சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை களவாடப்படுவதிலிருந்தும், மற்றவர்கள் பார்வையிடுவதிலிருந்தும் தடுப்பதற்கு iPassword Manager எனும் மென்பொருள் உதவியாக இருக்கின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது தரவுகளை AES 256-bit என்கிரிப்ட் முறைக்கு மாற்றியமைக்கின்றது.
இதன்மூலம் முக்கியமான வங்கிக்கணக்கு இலக்கங்கள், பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள், கிரடிட் கார்ட் தொடர்பான தகவல்கள் என்பவற்றினையும் பாதுகாப்பாக சேமித்துவைக்க முடியும்.
மேலும் இம்மென்பொருள் 11.9MB கோப்பு அளவு உடையதாக காணப்படுகின்றது.
உலகின் வேகம் கூடிய இணைய உலாவி

இணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
எனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட உதவும் மென்பொருள்

சில இணையத்தளங்கள் குறிப்பிட்ட நாடுகளில் பார்வையிடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும். இவ்வாறான இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு TunnelBear எனும் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கின்றது.
இம்மென்பொருளானது iOS, Android இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்கள் உட்பட PC மற்றும் Mac ஆகிய சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேறொரு நாட்டிலிருந்து (United State, United Kingdom, Japan, Canada, Germany, France ) இணையத்தளத்தினை பார்வையிடுவது போன்ற மாயையை ஏற்படுத்த முடியும்.
இதன் இலவச பதிப்பினை பயன்படுத்தும் போது ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 500MB வரையான தரவுகளையே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி

அனைத்து Android சாதனங்களிலும் Nokia HERE

Nokia HERE எனும் Map அப்பிளிக்கேஷன் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் சம்சுங்கின் Galaxy மொடல் கைப்பேசிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அனைத்து விதமான Android சாதனங்களுக்குமாக இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சம்சுங் தயாரிப்புக்கள் அல்லாத ஏனைய மொபைல் சாதனங்களிலும் இந்த அப்பிளிக்கேஷனை நிறுவி பயன்படுத்த முடியும்.
பீட்டா பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Nokia HERE அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.