| அநாவசியமான கோப்புக்களை நீக்க இலவச மென்பொருள் |
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
இவற்றினை விட தற்காலிக கோப்புக்கள் மற்றும் Internet Explorer, Chrome, Firefox, Opera ஆகிய உலாவிகளில் சேமிக்கப்படும் Cache கோப்புக்கள் என்பனவற்றினையும் நீக்கி கணனியை வினைத்திறனுடன் செயற்பட வைப்பதற்கு உதவுகின்றது.
![]() |
காயங்கள் புதியவை
புதன், 22 அக்டோபர், 2014
| PDF கோப்பிலுள்ள படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு |
விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த இலவச மென்பொருளினைக் கொண்டு இரண்டே இரண்டு படிமுறைகளில் Text, Images, Logos மற்றும் தேவையற்ற பகுதிகளை Delete அல்லது Erase செய்ய முடியும்.
இவை தவிர எழுத்துக்கள், படங்களை உட்புகுத்தவும் முடிவதுடன், தவறான திசைகளில் காணப்படும் PDF பக்கங்களை திருப்பிக்கொள்ள (Rotate) முடியும்.
![]() |
| மல்வேர் மற்றும் தேவையற்றவையை நீக்க உதவும் மென்பொருள் |
காணப்படுகின்றன.
அறியாமல் கணனியில் நிறுவப்பட்ட இவ்வாறான மென்பொருட்களை இனம்கண்டு நீக்குவதற்கு Should I Remove It? எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது கணனியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதுடன், இணையத்தளங்கிலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் தேவையற்ற மென்பொருட்களை நீக்குதல், ஹேக்கர்களின் அனுமதியற்ற உள்நுழைவு என்பன தொடர்பாகவும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
![]() |
| வீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப் |
தற்போது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
Skype Qik என்று அழைக்கப்படும் இப்புதிய வசதியின் மூலம் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு சிறிய வீடியோ மெசேஜ்ஜினை அனுப்ப முடியும்.
மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய Skype Qik வசதியானது அன்ரோயிட், iOS, Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
![]() |
| iPad மற்றும் iPhone தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள் |
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது தரவுகளை AES 256-bit என்கிரிப்ட் முறைக்கு மாற்றியமைக்கின்றது.
இதன்மூலம் முக்கியமான வங்கிக்கணக்கு இலக்கங்கள், பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள், கிரடிட் கார்ட் தொடர்பான தகவல்கள் என்பவற்றினையும் பாதுகாப்பாக சேமித்துவைக்க முடியும்.
மேலும் இம்மென்பொருள் 11.9MB கோப்பு அளவு உடையதாக காணப்படுகின்றது.
|
| உலகின் வேகம் கூடிய இணைய உலாவி |
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
எனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
| தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட உதவும் மென்பொருள் |
இம்மென்பொருளானது iOS, Android இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்கள் உட்பட PC மற்றும் Mac ஆகிய சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேறொரு நாட்டிலிருந்து (United State, United Kingdom, Japan, Canada, Germany, France ) இணையத்தளத்தினை பார்வையிடுவது போன்ற மாயையை ஏற்படுத்த முடியும்.
இதன் இலவச பதிப்பினை பயன்படுத்தும் போது ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 500MB வரையான தரவுகளையே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி
![]() ![]() |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






